கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு!
கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு.. திடீரென ஏ.சி.யில் இருந்து வந்த புகை.
கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி இயந்திரங்களில் அதிக சப்தத்துடன் புகை வெளியேறியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி மேடைக்கு வந்தவுடன் தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது ஏசி இயந்திரங்களில் அடுத்தடுத்து திடீரென கேஸ் வெளியேறியது.
ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென ஏ.சி.யில் இருந்து புகை வந்ததை கண்டு பதற்றமடைந்த மாணவர்கள் உடனே வேறு பகுதிக்கு நகர்ந்தனர், பின்னர் ஏசி இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு, நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.