பரபரப்பு : சென்னையில் உள்ள முக்கிய வங்கியில் தீ விபத்து..!
சென்னை சாந்தோமில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் தீ விபத்து
சென்னை சாந்தோமில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயிலாப்பூர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களிலிருந்து நான்கு வாகனங்களில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.