சேலம்: 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி.
சேலத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது.இதனால்,நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களிடையே பரபரப்பு நிலவுகிறது.
சேலத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்கள் இன்று வழக்கம்போல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில்,நீதிபதியை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனை சுதாரித்துக் கொண்ட நீதிபதி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.எனினும், அவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, சிகிச்சைக்காக நீதிபதி பொன்பாண்டி அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே,அவரைக் கொலை முயன்ற பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ,அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில்,அலுவலக உதவியாளர் பிரகாஷ்-க்கு அடிக்கடி பணியிட மாறுதல் வழங்கப்பட்டநேற்று மீண்டும் சேலம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்த நிலையில்,தனது அதிகமான பணியிட மாற்றத்துக்கு நீதிபதி பொன்பாண்டி காரணமாக இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவரை கொலை செய்ய பிரகாஷ் முயன்றதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…