பரபரப்பு.., முதலமைச்சர் இல்லத்தின் முன் ஒருவர் தீக்குளிப்பு…!
முதலமைச்சர் இல்லத்தின் முன் ஒரு நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தின் முன் வந்த ஒரு நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்றவைத்துள்ளார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீயை பாதியில் அனைத்த போலிசார் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் தென்காசியை சார்ந்த வெற்றி வேல் என்பதும், அடுத்தமாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் தன்னை தேர்தலில் இருந்து விலகுமாறு சிலர் மிரட்டுவதாக தெரிவித்தார். இருப்பினும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.