செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் சென்னையின் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் ,இதனால் புதுச்சேரி கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், சென்னையில் உள்ள செம்பரப்பாக்கம் ஏரியானது வேகமாக நிரம்பி வருகிறது .எனவே சென்னை மாநகராட்சி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக கூறி வெள்ள அபாய எச்சரிக்கையை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி வெளியிட்ட வெள்ள அபாய எச்சரிக்கையில் ,
சென்னை குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 25அடியில் 22 அடியை நெருங்குவதால் ஏரியிலிருந்து இன்று 12 மணியளவில் 1000 கன அடி அளவிற்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் ,மேலும் நீர்வரத்திற்கு ஏற்ப படிப்படியாக உயர்த்தப்படும் என்றும் பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது .
எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் ஆற்றின் மிகைநீர் அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பதால் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் குறிப்பாக மண்டலம் 10,11,12 மற்றும் 13-ல் உள்ள கானு நகர்,சூளைப்பள்ளம்,திடீர் நகர்,அம்மன் நகர்,பர்மா காலனி,ஜாபன்கான் பேட்டை,கோட்டூர்புரம் ,சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றின் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் அருகிலுள்ள சென்னை மாநகராட்சியில் திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள 169 நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல் குறிப்பிட்டுள்ள மண்டலங்களில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள கட்டுபாட்டு அறை எண்களையும் தெரிவித்துள்ளனர் .அதன்படி
ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறை
உதவி எண் : 044-25384530 ,044-25384540
தொலைபேசி எண் : 1913
மண்டலம் 10 : 9445190210
மண்டலம் 11 :9445190211
மண்டலம் 12 :9445190212
மண்டலம் 13 :9445190213
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…