செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் 2000 கன அடியாக அதிகரிப்பு.!
தொடர் கனமழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனால் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஏரிக்கு வரும் நீர்வரத்து 6000 கன அடியாக உயர்ந்துள்ளது.எனவே ஏரியிலிருந்து திறந்து விடும் உபரி நீரின் அளவு 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர் ஆதாரமான ஸ்ரீபெரும்புதூர்,பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகளும் ஏற்கனவே நிறைந்து விட்ட காரணத்தினால் தற்போது பெய்யும் மழையால் வரும் தண்ணீரை அப்படியே திறந்து விடப்படுகிறது .எனவே ஸ்ரீபெரும்புதூர்-குன்றுத்தூர் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது .எனவே சாலைகள் முடப்பட்டு போக்குவரத்து வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் அடையாற்றின் கரையோரம் வெள்ளத்தில் மிதக்கிறது .இந்த நிலையில் தற்போதும் அதிக அளவு உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வருவதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்