சில ஊடகங்களைத் தவிர வேறு எவரும் என் பேட்டியை ஒளிபரப்ப போவதில்லை-ஜெயக்குமார்..!

சசிகலா சுற்றுப்பயணத்தால் எந்தவித பயனும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜாமின் நிபந்தனையாக காவல் நிலையத்தில் கையெழுத்துபோட வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருச்சி மத்திய குற்றப்பிரிவு அலுவலகம், ராயபுரம் ஆகிய இடங்களில் கையெழுத்து போட சொல்கின்றார்கள். அந்த அளவுக்கு என் கையெழுத்து இந்த அரசுக்கு முக்கியத்துவமாக உள்ளது. சசிகலா சுற்றுப்பயணத்தால் எந்தவித பயனும் இல்லை.
ஒருசில ஊடகங்களைத் தவிர வேறு எவரும் என் பேட்டியை ஒளிபரப்ப போவதில்லை. ஊடகங்கள் மன சாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். சசிகலாவின் சுற்றுப்பயணத்தால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025