அகரத்தில் நடந்த அகழாய்வு.. கி.பி. 17ஆம் நூற்றாண்டில் உபயோகித்த தங்க நாணயம் கண்டெடுப்பு!
கி.பி 17 நூற்றாண்டில் இந்த நாணயம் உபயோகத்தில் இருந்தாக கண்டறியப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில், மே 22-ம் தேதி முதல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள் உள்ளிட்ட அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் அகம் ஊரில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவும் எடை 300 மில்லி கிராமும் கொண்டுள்ளது, அதுமட்டுமில்ல கி.பி 17 நூற்றாண்டில் இந்த நாணயம் உபயோகத்தில் இருந்தாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாணயத்தின் முன்புறத்தில் நாமமும் நடுவில் சூரியனும் அதன் கீழ் சிங்கம் உருவமும் உள்ளதாம். பின்பக்கம் இரண்டு புள்ளிகளும் அதன் கீழ் இரண்டு கால் மட்டும் இரண்டு கைகளுடன் கூடிய உருவம் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாணயம் வீர ராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்படும் வந்ததாக தெரிய வந்துள்ளது
மேலும் இதற்க்கு முன், பெரிய விலங்கின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த எலும்பு, சுமார் 3 மீட்டர் அளவில் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.