ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி 63 அடியை எட்டியது..!

Published by
murugan

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 73 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது.
இந்நிலையில் அதிகாரிகள் தற்போது ஆழ்துளை கிணறுக்கு அருகில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை 07.05 மணிக்கு  ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கியது.
ஆனால் இரவு 12.10 வரை முதல் ரிக் இயந்திரம் மூலம் 35 அடி மட்டுமே தோண்டப்பட்டது. பின்னர் முதல் ரிக் இயந்திரத்தை விட மூன்று மடங்கு அதிக திறன் கொண்ட இரண்டாவது ரிக் இயந்திரம் இராமநாதபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இரவு 12 மணிக்கு மேல குழி தோண்டும் பணியை தொடங்கியது.
ஆனால் கடினமான பாறைகள் இருந்ததால் பிற்பகல் 1 வரை 45 அடி வரை மட்டுமே தோண்ட முடிந்தது. பின்னர் போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் 5 துளைகள் போடப்பட்டது. அதில் ஒரு துளை 40 அடியும் , மற்ற நான்கு துளைகள் 15 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டது.
இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மீண்டும் ரிக் இயந்திரம் குழி தோண்டும் பணியை தொடங்கியது.தற்போது ரிக் இயந்திரத்தால் 63 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் 5 துளைகள் போட்டதால்  2 மணி நேரத்தில்  ரிக் இயந்திரம் 10 அடிக்கு மேல் குழி தோண்டியது.

Published by
murugan

Recent Posts

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…

15 minutes ago

Live : 2025-ன் முதல் ஜல்லிக்கட்டு முதல்… பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…

32 minutes ago

சபரிமலையில் புதிய விமான நிலையம்! எத்தனை லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா?

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…

1 hour ago

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

2 hours ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

3 hours ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

13 hours ago