ஆழ்துளை கிணறு அருகே 45 அடி வரை தோண்டப்பட்ட குழி ! ஆய்வு செய்ய குழிக்குள் இறங்கும் வீரர்
45அடி வரை தோண்டப்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்ய குழிக்குள் தீயணைப்பு படை வீரர் இறங்குகிறார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி திருச்சியில் உள்ள நடுகாட்டுபட்டியில் தொடந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு அருகே 45 அடி வரை குழி தோண்டப்பட்டது.தற்போது தோண்டப்பட்டுள்ள குழிக்குள் இறங்கி ஆய்வு செய்ய ஏணி மூலம் தீயணைப்புப் படை வீரர் இறங்குகிறார்.பாறை மற்றும் மண்ணின் தன்மையை ஆராய மாதிரி எடுக்க சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.