தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை தேர்வுகள் ரத்தா.?
கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமல் நேரடி தேர்ச்சி வழங்குவது பற்றி பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தமிழகத்தில் அனைத்து பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை முழு ஆண்டு தேர்வுகள் ரத்து செய்ய பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் உத்தரபிரதேசத்தில் 1முதல் 8 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.