மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் வகையில் தேர்வுகள் ரத்து – முதல்வர் பழனிசாமி
மாணவர்களின் மன உளைச்சலை போக்கவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அதன் பின் கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.
இந்நிலையில், கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் அமைச்சரான கே. பி. அன்பழகன் கூறுகையில், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே மாணவர்கள் தேர்ச்சி தான். கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச்சி என தெரிவித்துள்ளார்.இது குறித்து கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, முதல்வர் பழனிசாமி மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் நோக்கில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.