+1 வகுப்புக்கு ஜூன் 2 ஆம் தேதி தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக முழுவதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2 ஆம் தேதி முதல் நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழக முழுவதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2 ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதுபோன்று விடுபட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 4 இல் நடைபெறும் என்றும் 12 ஆம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதையயடுத்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார். பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.