#Goodnews:இந்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு – தேர்வுத்துறை அறிவிப்பு!
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தேர்வுத்துறை உத்தரவு.
10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி வாரியத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கி தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,
- 10,11,12 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை தேர்வில் எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாட விலக்கு அளிக்க உத்தரவு.
- 10 ஆம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு,செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு .
- 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளரை பணியமர்த்திக்கொள்ள அனுமதி.
- மாற்றுத்திறன் தேர்வர்கள் தரை தளத்திலேயே தேர்வினை எழுத வசதி.
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு போன்ற சலுகைகளுக்கு கூடுதலாக அனுமதி வழங்கி தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.