12-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கான தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்
12-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கான தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாமல் போனது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 34,482 மாணவர்கள் எழுதவில்லை .718 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் ,தேர்வு முடிந்த 4 நாட்களில் முடிவு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.