ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் – டிடிவி தினகரன் கண்டனம்
‘ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட்.
ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்திற்குரியது.
ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இங்கேயே தேர்வு மையங்களை ஒதுக்கிட ரயில்வே அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக எம்.பி.க்கள் இதுகுறித்து உரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இங்கேயே தேர்வு மையங்களை ஒதுக்கிட ரயில்வே அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக எம்.பி.க்கள் இதுகுறித்து உரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துகிறேன். (2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 6, 2022