தேர்வு முடிவுகள் என்பது நமது வாழ்வை தீர்மானிப்பவை அல்ல – ஈபிஎஸ்

Published by
லீனா

தேர்வு முடிவுகள் என்பது நமது வாழ்வை தீர்மானிப்பவை அல்ல, மாணவர்கள் நெஞ்சுரம் கொண்டு எதிர்வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என ஈபிஎஸ் ட்விட்.

நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, 10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள் 11 அரசுப்பள்ளி மாணவர்கள் தொடர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நடப்பாண்டில் இருந்து பொதுத்தேர்வு முன்பே உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர்  பக்கத்தில்,’நேற்று வெளியான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 28 மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துகொண்ட செய்தி மிகுந்த மனவேதனையை தருகிறது, தேர்வு முடிவுகள் என்பது நமது வாழ்வை தீர்மானிப்பவை அல்ல, மாணவர்கள் நெஞ்சுரம் கொண்டு எதிர்வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

20 mins ago

விறுவிறுப்பாக நடைபெறும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் … தற்போதய நிலவரம் என்ன?

ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…

31 mins ago

“பிக் பாஸ் போறேன் ஆதரவு கொடுங்க”..கெஞ்சும் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருத்திகா!!

சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள்.…

40 mins ago

குடை எடுத்துக்கோங்க.. அடுத்த 2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழை பெய்யும்.!

சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

43 mins ago

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் மறைவு.. நானி, ஜூனியர் என்டிஆர் அஞ்சலி.!

ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும்…

57 mins ago

“மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்கவைக்கும்”.. அஜித் பேசிய வைரல் வீடியோ.!

சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…

1 hour ago