தேர்வு முடிவுகள் என்பது நமது வாழ்வை தீர்மானிப்பவை அல்ல – ஈபிஎஸ்
தேர்வு முடிவுகள் என்பது நமது வாழ்வை தீர்மானிப்பவை அல்ல, மாணவர்கள் நெஞ்சுரம் கொண்டு எதிர்வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என ஈபிஎஸ் ட்விட்.
நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, 10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள் 11 அரசுப்பள்ளி மாணவர்கள் தொடர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நடப்பாண்டில் இருந்து பொதுத்தேர்வு முன்பே உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’நேற்று வெளியான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 28 மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துகொண்ட செய்தி மிகுந்த மனவேதனையை தருகிறது, தேர்வு முடிவுகள் என்பது நமது வாழ்வை தீர்மானிப்பவை அல்ல, மாணவர்கள் நெஞ்சுரம் கொண்டு எதிர்வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
நேற்று வெளியான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த
28 மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துகொண்ட செய்தி மிகுந்த மனவேதனையை தருகிறது,
தேர்வு முடிவுகள் என்பது நமது வாழ்வை தீர்மானிப்பவை அல்ல,
மாணவர்கள் நெஞ்சுரம் கொண்டு எதிர்வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 21, 2022