பொங்கல் அன்று தேர்வு..”எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை”..சு.வெங்கடேசன் கண்டனம்!
பொங்கல் நாளில் (ஜன.14) நடைபெறும் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டதாக கூறி தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. பொங்கல் அன்று தேர்வுகள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது “பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை.
ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. “துர்கா பூஜை அல்லது தீபாவளி அன்று இதுபோல தேர்வு தேதிகளை ஒன்றிய அரசு அறிவிக்க முடியுமா?” எனவும் கேள்விகளை சு.வெங்கடேசன் எம்பி எழுப்பியுள்ளார்.
கடிதம்
சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
“அறுவடைத் திருநாளான” பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள்.
எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை.
அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை.
ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று.
தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. 1/2 @nsitharaman @theicai #UnionGovt#ExamsOnPongalDay#தமிழர்திருநாள்… pic.twitter.com/YcdMckPkf3
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 24, 2024