காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு..!
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், நடப்புக் கல்வியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதி இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு பாடத்திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பொதுத்தேர்வு நடைபெறும் என மாணவர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தநிலையில், தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரி சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும் எனவும் காலை 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாள் வாசிப்பதற்கும், 10.10 முதல் 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.