பொங்கல் திருநாளில் தேர்வு உறுதி! மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்.!

Default Image

பொங்கல் திருநாளில் எஸ்பிஐ தேர்வு நடைபெறுவது உறுதி எனும் வங்கியின் பதிலுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்தெரிவித்துள்ளார்.

ஸ்டேட் பேங்க் கிளார்க் பணிகளுக்கான நுழைவுத்தேர்வு தேதி ஜனவரி-15 என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்வுத்தேதியை மாற்றக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி, கடிதம் மூலம் வலியுறுத்தியதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அறையில் சு.வெங்கடேசன் எம்.பி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமவளவன், மக்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் செல்லக்குமார் ஆகியோரும் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலையிட்டதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சருடன் தான் இது குறித்து வலியுறுத்துவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்வு தேதியை மாற்றுவதில் எந்தவித சாத்தியக்கூறும் இல்லை என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டரில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழர் திருநாளில், திருவிழாவைக் கொண்டாடாமல் தேர்வுக்கு பதற்றமாக அலைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை எங்கள் மாணவர்களுக்கு மாற்றிவிட்டிர்கள். தமிழரின் பண்பாட்டையும், உரிமையையும் அவமதிப்பதும், அலட்சியப்படுத்துவதும் அரசின், தினசரி வேலையாக இருப்பதாக அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்