BREAKING NEWS:தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து!

Default Image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து தேர்வு செய்யப்பட்டது.

நேற்று  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து தேர்வு செய்யப்பட்டது.தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Minister Sekarbabu
Priyanka Gandhi
AUS vs IND , KL Rahul - Jaiswal
amaran ott
Congress - TMC - BJP
Annamalai (14) (1)