அதிமுக அரசியல் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், ஓர் பெண் காவலரை ஒருமையையில் பேசி திட்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில், அதிமுக சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. அண்ணா நூற்றாண்டு விழா எனும் பெயரில் இந்த அரசியல் கூட்டம் நடைபெற்றது.
அதில் பல்வேறு அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதில், முன்னாள் அதிமுக அமைச்சர் முல்லை வேந்தனும் கலந்து கொண்டார். அந்த விழாவில் முல்லை வேந்தன் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
அவர் பேசுகையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை கூறி, அந்த அப்பகுதியில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ) இருக்கும் பெண் காவலரை குறிப்பிட்டு, ‘ ஒரு பொம்பள, அவ பண்ணி மேய்க்க கூட லாயக்கில்லை. அவ ஒரு அடங்காபிடாரி.
ஒரு பெட்டிஷனை கொடுக்க அனுமதி கேட்டால், எங்க வந்து கொடுக்குற, அங்க போய் கொடு என கூறுகிறார் , பின்னர், டி.எஸ்.பியிடம் சென்று, ‘ உங்களுக்கு கிழே இருக்குற அந்த பொம்பள ஒரு அடங்காபிடாரி தெரியுமா?” என கூறிவிட்டு வந்தேன் என கூறினார்.
முன்னாள் அமைச்சர், ஒரு பெண் காவலரை ஒருமையில் பேசி திட்டி பேசியது, அப்பகுதியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…