முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!

Published by
murugan

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மனு மீதான விசாரணை  பிப்ரவரி 6-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதிமுக ஆட்சியில் கடந்த 2001முதல் 2006 சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி இருந்தார். அப்போது அவரும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து
உத்தரவிட்டது.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் வளர்மதியின் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து வழக்கு  குறித்து வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்கவும், இந்த வழக்கில் டிசம்பர் 4-ம் தேதி முதல் வாதங்களைத் தொடங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தரப்பிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாணைக்கு தடை விதிக்கக்கோரி  உச்சநீதிமன்றத்தில் பா.வளர்மதி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மேல்முறையீட்டு மனு டிசம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “முடித்து வைத்த வழக்கு சுமோடோ வழக்காக  எடுக்கப்பட்டது ஏற்புடையதல்ல, வேறு அமர்வில் உள்ள வழக்கோடு இதை தொடர்புபடுத்தி விசாரிக்க வேண்டாம். கடந்த 2006 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தான் நான் அமைச்சராக இருந்தேன். தீர்ப்பு வழங்கிய பின் 10 ஆண்டுகளுக்கு பிறகு வாழ்க்கை உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது.

வழக்கு மறு விசாரணைக்கு எடுத்ததே தவறு என்ற கோணத்தில் அனுகுகிறோம், உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்ற வேறொரு வழக்கில் ஐகோர்ட் உத்தரவை அறிக்கையாக அளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வளர்மதி மனு மீதான விசாரணையை பிப்ரவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Recent Posts

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

21 minutes ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

1 hour ago

இப்படி கூட சிக்ஸர் அடிக்கலாமா? ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…

1 hour ago

ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…

2 hours ago

உயர்ந்தது அதானி பங்குகள்! ஏற்றத்துடன் நிறைவான இந்திய பங்குச்சந்தை!

மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…

2 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து பற்றி பரவும் வதந்தி! மௌனம் கலைத்த மகள் ரஹீமா!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…

2 hours ago