முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மனு மீதான விசாரணை பிப்ரவரி 6-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிமுக ஆட்சியில் கடந்த 2001முதல் 2006 சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி இருந்தார். அப்போது அவரும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து
உத்தரவிட்டது.
இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் வளர்மதியின் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து வழக்கு குறித்து வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்கவும், இந்த வழக்கில் டிசம்பர் 4-ம் தேதி முதல் வாதங்களைத் தொடங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தரப்பிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாணைக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பா.வளர்மதி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு டிசம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “முடித்து வைத்த வழக்கு சுமோடோ வழக்காக எடுக்கப்பட்டது ஏற்புடையதல்ல, வேறு அமர்வில் உள்ள வழக்கோடு இதை தொடர்புபடுத்தி விசாரிக்க வேண்டாம். கடந்த 2006 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தான் நான் அமைச்சராக இருந்தேன். தீர்ப்பு வழங்கிய பின் 10 ஆண்டுகளுக்கு பிறகு வாழ்க்கை உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது.
வழக்கு மறு விசாரணைக்கு எடுத்ததே தவறு என்ற கோணத்தில் அனுகுகிறோம், உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்ற வேறொரு வழக்கில் ஐகோர்ட் உத்தரவை அறிக்கையாக அளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வளர்மதி மனு மீதான விசாரணையை பிப்ரவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.