சட்ட ஒழுங்கை காப்பாற்ற தெம்பில்லாத ஸ்டாலின் அரசு.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

Default Image

தமிழகத்தில், வெடிகுண்டு கலாச்சாரம், கத்தி கலாச்சாரம், கஞ்சா கலாச்சாரம், சூதாட்ட கலாச்சாரம் என வளர்ந்து வருகிறது. இதனை தடுக்க ஆளும் அரசுக்கு தெம்பில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்தை முன்வைத்து உள்ளார். 

தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு கோவையில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக அங்கு பலத்த பாதுகாப்பு போடபப்ட்டது.கோவையை தொடர்ந்து, மதுரை, கன்னியாகுமரி, என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஆளும் திமுக அரசு மீது வைத்துள்ளார்.

அவர் பேசியதாவது, ‘ தீவிரவாத பிரிவுகளுக்கு எதிராக, சட்டத்தை கையில் எடுக்கும் நபர்களுக்கு எதிரானவர்கள் மீது அரசுக்கு கவலையில்லை. இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க தெம்பில்லாத அரசு தான் ஸ்டாலின் அரசு.’ என்றும்,

மக்களின் எதிர்பார்பார்ப்பு இரண்டு தான், அடிப்படை தேவைகள் மற்றும் சட்ட ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். மக்கள் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கின்றனர். கோவை, தொடர்ந்து, கன்னியாகுமரி, மதுரை, தற்போது பல்லாவரம் தொகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ‘ என்றும்.

‘ தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம், கத்தி கலாச்சாரம், கஞ்சா கலாச்சாரம், சூதாட்ட கலாச்சாரம் என வளர்ந்து வருகிறது. ‘ என பெட்ரோல் குண்டு சம்பவங்கள் தொடர்பாக தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ‘ சென்னையில் அங்கங்கே பள்ளம் தான் இருக்கிறது.  அதற்கான போக்குவரத்து வழிகாட்டுதல் சரியில்லை.  மழைநீர் வடிகால்  முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மட்டும் சரியாக நடந்து வருகிறது. அது மட்டும் போதும் என நினைக்கிறார் முதல்வர். 234 தொகுதியையும் காப்பாற்ற வேண்டும். ‘ என தனது விமர்சனங்களை முன்வைத்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்