அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

CV Shanmugam: அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read More – #Election2024: மதுரையில் மீண்டும் எம்பி சு.வெங்கடேசன் போட்டி!

இதில் கலந்துக் கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Read More – பிரதமர் பேரணிக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு!

இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யவும் சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணைக்கு தடை விதித்த நீதிமன்றம், மனு குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்