அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிராகவும், திமுக அரசுக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பல்வேரு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுக தரப்பில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் உடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்பு காரணமாக அதிமுகவினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த லஞ்சஒழிப்பு துறை சோதனையின் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வரும் இடத்திற்கு செல்ல முயன்றார். ஆனால் காவல்துறையினர் உள்ளே விட மறுத்துவிட்டனர்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை என்ற பெயரில் எதிர் கட்சிகளை அடக்கலாம் என திமுக அரசு நினைக்கிறது.
தந்தை கலைஞர் கருணாநிதி எப்படி பழிவாங்கினாரோ அதே போல அவர் மகனும் செய்கிறார். ‘
ஸ்டாலின் அவர்கள் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு, வாக்குறுதிகளை நிறைவேற்ற திறனில்லாத திமுக அரசு.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை, திட்டங்களை இந்த அரசு ரத்து செய்துள்ளாது. முக்கியமாக தாலிக்கு தங்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தனை நாள் ஆகியும் மடிக்கணினி வழங்காத அரசு. அதனை கண்டுகொள்ளாமல், பள்ளி கல்வி துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு ரசிகர் மன்றம் மூலம் டிக்கெட் விற்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சொத்து வரி 150 சதவீதம் உயர்ந்துள்ளது. பால்விலை, கட்டுமான பொருட்கள் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மின்கட்டணம் மிக பெரிய அளவில் உயர்ந்துள்ளது. என பல்வேரு குற்றசாட்டுகளை சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறினார்.
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…