காலமானார் முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி..

Default Image
  • பழமை வாய்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் 1954-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கியவர்  சண்முக சுந்தரம் மோகன் ஆவர்.
  •  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
இவர்,   கடந்த 1966-ம் ஆண்டில் தமிழக அரசின் உதவி வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், அரசின் சிறப்பு வழக்கறிஞராகவும் தலைமை வழக்கறிஞராகவும்  பதவி உயர்வு பெற்றார். பின், 1974-ம் ஆண்டு இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியானார். பின்னர், 1-8-1975 அன்று நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.இதேபோல்,  19.10.1989 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். இந்நிலையில், இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் (90) இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்