முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவியின் சொத்துக்கள் முடக்கம்!
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஜாபர் சேட் மனைவியின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டின் ரூ.14.23 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது, வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட் மனைவி பர்வீன், துர்கா சங்கர் மற்றும் உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் ரூ.14.23 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மனைவி பர்வீன், துர்கா சங்கர், உதயகுமார் ஆகிய 3 பேருக்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்கியது அமலாக்கத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
ED has attached assets worth Rs. 14.23 Crore belonging to (i) Parvin Jaffar w/o M. S. Jaffar Sait, (retd-IPS), (ii) R Durgashankar S/o Rajamanickam, Former Secretary to the then CM of Tamil Nadu and (iii) T Udayakumar, Prop. of M/s Landmark Construction, Chennai under PMLA, 2002.
— ED (@dir_ed) November 9, 2022