திடீர் திருப்பம்!!அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவுக்கு ஆதரவு !!
- மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலுக்கு அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி,என்.ஆர்.காங்கிரஸ் தலா 1 தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்திக்கிறார் ராஜகண்ணப்பன்.அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார்.
ராஜகண்ணப்பன் 1996 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் .அதன்பிறகு மக்கள் தமிழ்தேசம் என்ற கட்சியை துவங்கி 2001ல் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார்.2001ல் திமுக கூட்டணியில் கண்ணப்பன் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட இளையாங்குடியில் அவரே களமிறங்கினார்.தற்போது அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் திடீர் முடிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.