#Breaking : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்.!
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்றவர் பி.கிருஷ்ணன். இவர் நேற்று மாலைகாலமானார்.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது நடைபெற்ற முதல் தேர்தலில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானவர் பி.கிருஷ்ணன். இவர் தற்போது எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்துள்ளார். வயது முதிர்வின் காரணமாக கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்துள்ளார்.
இந்நிலையில் 86 வயதான பி.கிருஷ்ணன் வயது முதிர்வின் காரணமாக நேற்று மாலை (சனிக்கிழமை) உயிரிழந்தார். இவரது நல்லடக்கம் இன்று (ஞாயிற்று கிழமை) நடைபெற உள்ளது.