ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது – அமைச்சர் தகவல்
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றம் என அமைச்சர் தகவல்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீடு திரும்புவார் என்றும் நேற்று இரவு மூச்சு திணறல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார் எனவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார்.