தீய சக்தி திமுகவை எதிர்த்து அமமுக தொடர்ந்து போராடுகிறது – டிடிவி தினகரன்
மக்கள் நன்மைக்காக தீய சக்தி திமுகவை எதிர்த்து அமமுக தொடர்ந்து போராடுகிறது என டிடிவி தினகரன் பேட்டி.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வதாக மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது என குற்றசாட்டினார். எதையெல்லாம் செய்கிறேன் என்று சொன்னர்களாளோ அதற்கு எதிர்மறையாக ஆட்சி செய்கின்றனர்.
மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு. எனவே, மக்கள் நன்மைக்காக தீய சக்தி திமுகவை எதிர்த்து அமமுக தொடர்ந்து போராடுகிறது என்று கூறினார். தமிழகத்திற்கு தேவையானதை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவது ஆளுநரின் கடமை. யார் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார்.