ரூ.4 கோடி பணம்.! MLA ரயில் டிக்கெட்.! சிக்கலில் நயினார் நாகேந்திரன்.?

Nainar Nagendran

சென்னை : 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலியை நோக்கி புறப்பட்ட ரயிலில் பயணித்த நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனின் உணவகத்தில் பணியாற்றும் 3 பேரிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது 4 கோடி ரூபாய் பணத்தை எந்தவித உரிய ஆவணமும் இல்லாமல் 3 பேர் கொண்டு வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

பணத்தை எடுத்து வந்ததாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பணத்திற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இப்படியான சமயத்தில் தற்போது ஓர் புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, ரயில் பயணம் செய்த அந்த மூன்று பேரும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக நெல்லை சட்டமன்ற உறுப்பினராக உள்ள நயினார் நாகேந்திரனின் சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டையை பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், பாஜக பிரமுகர் கோவர்தன் என்பவர் இதில் இடைத்தரகாராக செயல்பட்டதாகவும் அவரிடமிருந்து தாங்கள் பணம் பெற்றதாகவும் மூவரும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக, அடுத்ததாக நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடந்த திட்டமிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
earthquake -Vanuatu
power cut update
pradeep john Weather update
karunanidhi mk stalin
premalatha
VidudhalaiPart2 Censor Details