‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!’ – மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் வாழ்த்து..!
மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான பாரா ஆசியா விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில், இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டி நேற்று தொடங்கிய நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில், சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். ராம் சிங் வெண்கலம் வென்றுள்ளார். இந்த நிலையில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டும்மொருமுறை பெருமை தேடித்தந்துள்ளது. தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!’ என தெரிவித்துள்ளார்.
#AsianParaGames2022 உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி ????வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது @189thangavelu அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! https://t.co/DPFvJArjQj
— M.K.Stalin (@mkstalin) October 23, 2023