தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில்,படத்தை வெளியிட கூடாது என பலதரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வந்தது. ஆனால், படம் கடந்த 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து படம் வெளியாகியுள்ள நிலையில், பலரும் படத்தை தடை செய்யவேண்டும் என்றும், பலரும் படத்திற்கு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தற்போது தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கேரளா ஸ்டோரி படம் பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய தமிழிசை செளந்தரராஜன் “இந்த கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என்று நினைக்கிறேன் படம் ஐஎஸ்ஐஎஸ் எதிராக இது சித்தரிக்கப்படுகிறது.
எனவே அதற்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு எதிரானது என்று நினைப்பார்கள். தீவிரவாதத்திற்கு எதிரானது என்று நினைத்தால் நமக்கு ஆதரவான படம் என்று நினைப்பார்கள் அது அவரவர்களின் மன நிலையை பொறுத்தது.
பிரதமர் மோடி சொன்னது போல தீவிரவாதம் எந்த இடத்தில், எந்த ரூபத்தில் வந்தாலும் அது ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று. ’தி கேரளா ஸ்டோரி’ படம் பெண்களையும், இளைஞர்களையும் பாதிக்கும் வகையில் இருந்தால் அதன் உண்மை தன்மையை அறிய வேண்டும். தீவிரவாதத்தைப் பற்றி கேரளாவில் சட்டமன்றத்திலேயே பேசப்பட்டிருக்கிறது.
இவர்களுக்கு வேண்டிய கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம். ஆனால், சொல்ல வேண்டிய கருத்தை வைத்து எடுத்தால் கருத்து சுதந்திரம் கிடையாது உடனே தடை செய்வீர்கள். எல்லாரும் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் நாங்க எல்லாம் பார்க்க போகிறோம். ஆக உண்மை தன்மை எங்கு இருந்தாலும் அதனை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என கூறியுள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…