குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
- குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பாக பேரணி நடைபெறுகிறது.
- பேரணியில் கட்சி, மதம், சாதி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதவை கொண்டு வந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில்,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.இதனை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் பேரணி நடத்தப்படும்.மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் பேரணியில் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ‘#CAA2019 எதிர்ப்பு பேரணி’யில் கட்சி, மதம், சாதி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவரும் பங்கெடுத்து ஜனநாயகக் குரல் எழுப்ப வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்!
ஒற்றைக் குரலில் ஒற்றுமை காட்டுவோம்!
ஒற்றுமைக் குரலால் வெற்றியை ஈட்டுவோம்! pic.twitter.com/t3pBvV9mO6
— M.K.Stalin (@mkstalin) December 19, 2019
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வரும் 23ம் தேதி நடக்கும் பேரணியில் பங்கேற்க, பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.