தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதை கேவலமாக பார்க்கிறேன் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதில், தலைமை நீதிபதி மற்றும் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்ற 3 நீதிபதிகள் 10% இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தனர். பெரும்பான்மையான நீதிபதிகள் ஆதரவு தெரிவித்ததால் 10% இட ஒதுக்கீடு உறுதியானது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை பகிர்ந்த வருகின்றனர்.
அந்தவகையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், அனைவருக்கும் இட ஒதுக்கீடு தேவை, ஆனால் அதற்கு முன் வகுப்புவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். 10 % இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் திமுக, மாநில அரசு பணியிடங்களுக்கான தேர்வில் தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதை கேவலமாக பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…