#Breaking: “தமிழகத்தில் இரவு 7 மணி வரை அனைவரும் வாக்களிக்கலாம்”- தேர்தல் அதிகாரி அதிரடி!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை அனைவரும் வாக்களிக்கலாம் என்றும், 6-7 மணி வரை பொதுமக்கள் வாக்களித்த பின் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். மக்கள் சிரமமின்றி வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது வாக்குபதிவிற்கான நேரம் முடிவடையவுள்ளதால், 6-7 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் இரவு 7 மணி வரை அனைவரும் வாக்களிக்கலாம் என்றும், 6-7 மணி வரை பொதுமக்கள் வாக்களித்த பின் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார்.
அதன்படி, வாக்களிக்க வரும் கொரோனா நோயாளிகள் அனைவரும் PPE கிட் உடை அணிந்து வர வேண்டும் என்றும், அனைத்து வாக்குசாவடிகளில் பாதுகாப்பு உடைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.