எல்லாரையும் எங்களுடைய அதிமுகவைச் சேர்ந்தவர்கள்- சசிகலா..!
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.
பிப்.8 திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்!
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் திமுக, அதிமுக தொண்டர்கள் பலர் மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாங்கள் எப்போதும் மக்களை நம்பி இருப்பவர்கள், நிச்சயமாக மக்கள் எங்கள் பக்கம் இருப்பார்கள், தேர்தலுக்கு முன் அதிமுக-வை ஒருங்கிணைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்.
எல்லாரையும் எங்களுடைய அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று தான் நினைக்கிறேன், மத்திய அரசிடம் நமக்கு என்ன வேண்டும் என்று திறமையாக கேட்டு பெறுவோருக்கு வாக்களிக்க வேண்டும், இன்றைய சூழலை வைத்து எதையும் கவனிக்க முடியாது, எதுவும் மாறும், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், நடிகர் விஜய் புதிய கட்சி ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது” என தெரிவித்தார்.