‘ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை’ – டிடிவி தினகரன் ட்வீட்

Default Image

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழும் அவலங்கள் குறித்த டாக்டர் ஒருவரின் வீடியோ பதிவு வேதனை தருகிறது.

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் அவர்கள், ஒரு மருத்துவரின் வீடியோவை பார்த்த பின் ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழும் அவலங்கள் குறித்த டாக்டர் ஒருவரின் வீடியோ பதிவு வேதனை தருகிறது. கொரோனா பேரிடரின் துயரத்தை விட, அதற்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மன வலியை ஏற்படுத்துகிறது.

‘ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை’ என்ற எண்ணம் மக்களிடம் எழத்தொடங்கியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளில் முறையான வசதிகள் இல்லாமலும், மின்வெட்டினால் வெண்டிலேட்டர் இயங்காமலும் நோயாளிகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக செய்திட வேண்டும்.

முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்