மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை.
தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது; தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்பட கூடாது என்பதால், என் பணிகளை தொடர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. பள்ளிகளை வருமான நோக்கத்தில் நடத்தாமல் தொண்டாக நினைத்து நடத்த வேண்டும். தொல்லைகள், அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள் என மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் படிப்போடு கல்வி முடிவதில்லை பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்து விடாது என தெரிவித்துள்ளார். மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவிகளுக்கு மன, உடல்ரீதியாக இழி செயல் நடந்தால் தமிழக அரசு அதை வேடிக்கை பார்க்காது என்றும் எச்சரித்துள்ளார்.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…