“உள்ளங்கைக்குள் உலகம்..” புதிய புகைப்படத்துடன் முதலமைச்சர் போட்ட டிவீட்.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தாலும், இங்கு அவர் மேற்கொள்ள வேண்டிய பணிகளை இணையத்தின் வாயிலாக மேற்கொண்டு வருகிறார்.
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, சான் பிராசிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது சிகாகோவிற்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிகாகோவில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பிரபல தொழில் நிறுவன உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் அவர்கள் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தது வருகிறார். இதுவரையில் 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தாலும், தமிழ்நாட்டில் அவர் மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அதற்கான கோப்புகளில் இணைய வாயிலாக கையெழுத்திட்டு வருகிறார்.
இது தொடர்பாக, தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, ” அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இணையவழியில் எனது பணி தொடர்கிறது.” என பதிவிட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன.
அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது… pic.twitter.com/WeuWB1B4yn
— M.K.Stalin (@mkstalin) September 7, 2024
அதனுடே BNY Mellon எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அந்நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.