‘உதவி வாங்கிய கைகளின் ஈரம்கூட இன்னும் காயவில்லை’ – இந்த உரிமை இலங்கை அரசுக்கு இல்லை ..! – ராமதாஸ்

Published by
லீனா

தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் ட்வீட்.

கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி, இலங்கை கடற்படையினர் 105 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 105 படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏலம் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கான உரிமை இலங்கை அரசுக்கு இல்லை!

சிங்களப் படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கும்படி இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சரே பேசிய நிலையில், இலங்கை அரசின் இந்த அறிவிப்பு இந்தியாவை அவமதிக்கும் செயலாகும்!

இந்தியாவிடமிருந்து இலங்கை ரூ.18,090 கோடி கடன் வசதி பெற்றுள்ளது. உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிப்பது நியாயமல்ல. இலங்கையின் உண்மை முகத்தை இந்தியா அறிய வேண்டும்!

மீனவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டால் அவர்களின் படகுகளையும் ஒப்படைக்க இலங்கை கடந்த காலத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி இலங்கை சிறைகளில் இப்போது வாடும் 56 மீனவர்களையும், அனைத்து படகுகளையும் விடுவிக்கும்படி இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…

16 minutes ago

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

9 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

11 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

12 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

12 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

13 hours ago