அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், சசிகலா அவர்கள், ‘நான் விரைவில் வந்துவிடுவேன். அனைத்தையும் சரி செய்து விடலாம்.’ என தொடர்களிடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ‘இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுக-வின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே அவருக்கு உதவியாக இருந்து வந்தார். அவ்வளவு தான்.
சசிகலா இப்பொது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எடுக்காது. எங்கள் மூத்தவர் கருவாடு மீன் என்று சொன்னார். ஆனால், கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…