அதிமுக கிளை கழகத்தை கட்டமைக்காவிட்டால் வெற்றி கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை.
விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமன்ற தேர்தலுக்கு 4 ஆண்டுகளும், எம்பி தேர்தலுக்கு 2 ஆண்டுகளும் அவகாசம் உள்ள நிலையில், அதிமுக கிளை கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும்.
அப்படி அதிமுக கிளை கழகங்களை சரியாக கட்டமைக்காவிட்டால் ரூ.50 கோடி செலவழித்தாலும் ஒரு இடம் கூட வெற்றி கிடைக்காது எனவும் எச்சரிக்கை விடுத்தார். பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீண்டிக்க கூடாது என வலியுறுத்தினார். அதிமுக அமைப்பு தேர்தலில் காலியாக உள்ள பதவிகளில் புதிதாக கட்சிக்கு வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிதான் நல்லது செய்வார்கள் என்று நினைத்து மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், எம்எல்ஏ, எம்பி தேர்தலில் மக்கள் ஆளும் கட்சியின் மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தி எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…