ஆட்சியே கவிழ்ந்தாலும் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் – முதலமைச்சர் நாராயணசாமி
- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- ஆட்சியே கவிழ்ந்தாலும் இந்தச் சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்ற மாட்டோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவம் எதிர்ப்பை சந்தித்துள்ளது.எனவே இந்த சட்டத்தை கண்டித்து புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், இஸ்லாமிய மக்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.
எங்கள் உயிரேபோனாலும், ஆட்சியே கவிழ்ந்தாலும் இந்தச் சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்ற மாட்டோம்.யாராக இருந்தாலும் எதிர்க்க தயாராக உள்ளோம். எங்களுக்கு ஆட்சி முக்கியமல்ல, அதிகாரம் முக்கியமல்ல, மக்களுடைய சக்தி எங்கள் பக்கம் உள்ளது என்று பேசினார்.