கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடைபெறும் – அமைச்சர் பொன்முடி

Default Image

விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் , ல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துரை அமைச்சர் பொன்முடி அவர்கள், ‘கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கு 1,3,5-வது செமஸ்டர் தேர்வுகள்  ஆன்லைனில் தான் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், செய்முறை தேர்வுகளுக்காக மாணவர்கள் நலன் கருதி பிப்ரவரி 1-ல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்