மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்கிறேன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்கிறேன்.ஜெயலலிதா ஆன்மாவின் துணையுடன் அதிமுக ஆட்சி நீடித்து நிற்கும், எந்த தேர்தலையும் சந்திக்க தயார். 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் தனித்து நடந்தாலும், மக்களவை தேர்தலோடு நடந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…